
ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று வியாழக்கிழமை இரவு விசேட அதிரடிப் படையினரால் பதுளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்
பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை வீரியபுர பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனைக்கு உட்படுத்திய போது வீட்டில் மறைத்து வைத்திருந்த 65கிராம் 120 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
அத்தோடு 56 வயதுடைய வீரியபுர பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரையும் ஐஸ் போதைப் பொருளையும் விசேட அதிரடிப் படையினர் பதுளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பதுளை பொலிஸார், சந்தேக நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
