ஐஸ் போதைப் பொருட்களுடன் கைதான அரச உத்தியோகத்தரிடம் விசாரணை

-அம்பாறை நிருபர்-

ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பகுதியில் உள்ள கல்வி திணைக்களத்தில் பணிபுரியும் 43 வயதுடைய ஒருவரை இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் விசேட தேர்ச்சி பெற்ற புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் விநியோகம் செய்து வந்த குறித்த சந்தேக நபரை சாய்ந்தமருது பிரதான வீதியில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

450,000 பெறுமதியான 25 கிராம் ஐஸ் போதைப்பொருளினை பைகளில் உறையிடப்பட்டு மிக சூட்சுமமாக கடத்தி வரப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர் மற்றும் சான்றுப்பொருட்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்