ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது

கல்முனை நகரில் உள்ள விடுதி ஒன்றில் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருட்களுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்தைச் சேர்ந்த 36 மற்றும் 49 வயதுடைய இருவரே கைது இதன் போது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்