ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
கொழும்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்ததாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் மா அதிபரின் சிறப்பு நடவடிக்கை போக்குவரத்து தலைமையகத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 590 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயவர்தனபுர சிறப்பு அதிரடிப்படை கந்துரே அதிகாரிகள் மாளிகாவத்தையில் உள்ள வீடொன்றை சோதனை செய்த நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மாளிகாவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேக நபர் சட்ட மருத்துவ அதிகாரியிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.