
ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 30 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் ஐஸ் போதைப்பொருள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மிஹிந்தலை, ரங்கம பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்
