ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை – ஹரஸ்பார பிரதேசத்தில் 360 கிராம் 95 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை அத்துருகிரிய, மஹஜன மாவத்தை பிரதேசத்தில், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 05 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரே இதன்போத கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
