
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
பதுளையில் ஐஸ் வகை போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை – பல்லேக பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பதுளை – பல்லேக பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 6 கிராமும் 600 மில்லிகிராமும் நிறையுடைய குறித்த ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைதானவரை இன்று வெள்ளிக்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
