ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் கல்முனையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கல்முனை விசேட அதிரடிப் படையினரால் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் வைத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

குருநாகல் பொல்காவலை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 5 கிராம் 340 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபரை கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.