போதைப்பொருளுடன் இருவர் கைது
மன்னார் மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் வீதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் தள்ளாடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்க்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது வாகனத்தினுள் நூதனமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்பிட்டியை சேர்ந்த 38 வயது மற்றும் மன்னார் அடம்பனைச் சேர்ந்த 27 வயது நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்