ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் தற்கொலை

மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் ஒருவரை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக அவரின் குடும்பத்தார் எடுத்த முயற்சி பயனளிக்காத நிலையில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை காலை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பொடிமாத்தையா சந்திரசேன அனச்ராஜ் (வயது – 21) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்கு பின் இவரின் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்