ஐஸ்கிரீம்… விலை எவ்வளவு தெரியுமா?
உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம் ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. இலங்கை மதிப்பில் இந்த ஐஸ்கிரீமின் விலை 19 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீமாக ‘பைகுயா’ கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
ஜப்பானில் Cellato என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஐஸ்கிரீமில் அரிய வகை பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. தங்கத் துகள்கள், வெள்ளை உணவுப் பண’டங்கள் (truffle) என்ற பொருளையும் சேர்ப்பதால் தான் இந்த ஐஸ்கிரீமுக்கு இவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Parmigiano Reggiano என்ற அரிய வகை cheese இந்த ஐஸ்கிரீமில் சேர்க்கப்பட்டுள்ளது. மனதை கவரும் வாசமும், அலாதியான ருசியும் இந்த ஐஸ்கிரீம் கொண்டிருக்கும் என்றும், ஒன்றரை வருட முயற்சிக்கு பிறகே இந்த ஐஸ்கிரீமை உருவாக்கியுள்ளதாக இந் நிறுவனம் கூறியுள்ளது.
New record: Most expensive ice cream – JP¥873,400 (£5,469; €6,211; $6,696) made by OMER in Japan.
The ice cream includes edible gold leaf, white truffle and natural cheeses 🍨 pic.twitter.com/kaJOACEear
— Guinness World Records (@GWR) May 18, 2023
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்