ஐஸூடன் சிக்கிய தாத்தா
யாழ்ப்பாணத்தில், பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயது முதியவர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 70 வயதுமிக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முதியவரிடம் இருந்துஇ ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.