ஐந்து மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐந்து மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்குவதற்கு அந்தந்த மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுகள் தீர்மானித்துள்ளன.

இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாளைய தினம் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த நாளுக்கான கல்வி செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.