ஐந்து மணி நேர வாக்குமூலம்: வெளியேறினார் பிள்ளையான்

குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐந்து மணிநேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறினார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக வெளியான சனல் 4 காணொளி குறித்து வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் காலை வாக்குமூலம் வழங்க வந்திருந்தார்.

இந்நிலையில் 5 மணி நேரத்தின் பின்னர் வாக்குமூலம் வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார்.