ஐந்து கோடிக்கு அதிக மதிப்புள்ள போதைப்பொருளுடன் மூவர் கைது!

ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் இரு வேறு பகுதிகளில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு, கறுவாத்தோட்டம், கட்டுநாயக்க விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே இவர்களை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்த ஒருவரையும், அவருக்கு உதவி செய்தவரையும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 2 கிலோகிராம் குஷ் வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு கறுவாத்தோட்டப் பகுதியில் ஒரு கிலோவும் 190 கிராம் எடையுடைய ஹெரோயின் வகை போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.