ஐசிசி-யின் செப்டம்பர் மாதத்திற்கான விருதை வென்ற அபிஷேக், மந்தனா

சர்வதேச கிரிக்கெட் பேரவை மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய கிண்ண தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்த விருதை அவர் தட்டி சென்றுள்ளார்.

இதேவேளை மகளிருக்கான செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடர் நாயகி விருதை மந்தனா வென்றார்.

3 போட்டிகளில் விளையாடிய மந்தனா 1 சதத்துடன் 308 ரன்கள் குவித்தார்.

இந்தநிலையில் அவர் இந்த விருதை வென்றுள்ளார்.