ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகம் மீது இனந்தெரியாத குண்டர்கள் தாக்குதல்

-யாழ் நிருபர்-

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை அமைப்பாளரின் அலுவலகம் மீது இனந்தெரியாத குண்டர்கள் கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

யாழ். வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும், மனித உரிமைகள் மற்றும் சமூக செயற்பட்டளாருமான, முருகவேல் சதாசிவம் என்பவருடைய, நல்லூரில் அமைந்துள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் கடந்த வியாழக்கிழமை இரவுநேரம் 10:30 மணியளவில் கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இத் தாக்குதலினால் அமைப்பாளரின் அலுவலக யன்னல்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிகக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகி்ன்றனர்.