ஐக்கிய இராச்சிய பயணம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியன்று ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வோல்வர் ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தது தொடர்பான ஊடக அறிக்கைகளுக்கு மறுப்பு தெரிவித்து ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்புடைய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, விரைவில் ஒரு முறையான அறிக்கை வெளியிடப்படும் என்று ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.