ஏ.பீ.எச். கல்வி நிறுவனத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு!
-சம்மாந்துறை நிருபர்-
ஏ.பீ.எச். கல்வி நிறுவனத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறை ஏ.பீ.எச். கல்வி நிறுவன வளாகத்தில் பணிப்பாளர் எம்.சீ.நௌஷா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சம்மாந்துறை ஏ.பீ.எச். கல்வி நிறுவனத்தில் எம்.எம். நிஹாப் 143, எம்.ஆர். அஹமட் ஹம்தி 147, எம்.எஃப். அயானா 141, ஆர். மர்யம் ஜீஹ்றா 158, ஏ. பாத்திமா மின்ஹா 153, ஐ. அமல் ஷய்னப் 161, எம்.எம். அகில் அஹமட் 141, கே. அப்fகன் ஹுசைன் 139 ஆகிய மாணவர்கள் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து ஏ.பீ.எச். கல்வி நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன், ஏ.பீ.எச். கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர், ஆசிரியரை கௌரவித்து நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு, சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை மத்திய குழு செயலாளர் அஸாறுடீன் சலீம், சம்மாந்துறை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரும், சூழல் நண்பர்கள் கூட்டமைப்பின் தலைவருமான ஏ.ஏ.சீ.எம். நிஸாம், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அர்ஷத் இஸ்மாயில், புலமைப்பாதை புத்தகத்தின் பிரதம ஆசிரியர் எஸ்.அஜிந்தன், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.