
ஏஷஸ் தொடரில் அதிக சதங்கள்: இரண்டாம் இடத்தைப் பிடித்தார் ஸ்மித்
ஏஷஸ் கிரிக்கெட் தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் வரிசையில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சிட்னியில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய நிலையில், அவர் இரண்டாமிடத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.
அத்துடன் குறித்த பட்டியலில் டொன் பிரேட்மேன் 19 சதங்களுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக ஜெக் ஹோப்ஸ் 12 சதங்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளதுடன், ஸ்டீவ் வாக் 10 சதங்களுடன் நான்காமிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது
