
ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் 7 மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும்.
இதன்படி, கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
