
மட்டு.வவுணதீவில் ஏழு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு உயிரை மாய்ப்பு
-வவுணதீவு நிருபர்-
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மண்டபத்தடியில் ஆண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்டபத்தடியைச் சேர்ந்த 65 வயதுடை ஏழு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மதுபோதையில் வந்ததாகவும், பின்னர் இரவு உணவை உண்டுவிட்டு அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள மற்றுமொரு குடிசை வீட்டில் சென்றவர் தனக்குத் தானே தூக்கிட்டுள்ளார்.
அதிகாலை 5.30 மணியளவில் அவரது பிள்ளைகள் சென்று அவரை மீட்ட போது, உயிருடன் காணப்படதாகவும், பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிற்கமைவாக, சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டார்.
பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும்படி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
