
ஏழாவது மாடியிலிருந்து வீழ்ந்த வயோதிப பெண் உயிரிழப்பு
பம்பலபிடிய பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் ஏழாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்.
மிலகிரிய அவெனியு நீதிமன்ற அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் வசித்து வந்த ஜெயாநந்தன் வேலம்மா (வயது – 76) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் ஏதோ ஒரு நோய்காக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார் என்பது பொலிஸாரது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும் இவரது மரணம் கொலை தற்கொலையா என்பது இது வரையிலும் கண்டு பிடிக்கபடவில்லை.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
