ஏறாவூர் ஸ்ரீ பத்திர காளி அம்பாள் ஆலய பூ மிதிப்பு சடங்கு

பேரருள் நிறை ஏறாவூர் அன்னை ஸ்ரீ பத்திர காளி அம்பாள் ஆலய பூ மிதிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

மட்டக்களப்பு ஏறாவூரில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திர காளி அம்பாளின் ஆலய வருடாந்த திருச்சடங்கு ஆறாம் திகதி திருகதவு திறத்தலுடன் ஆரம்பமாகி இன்றைய தினம் தீ மிதித்தல் சடங்குடன் நிறைவடைந்தது.

அம்பாளின் அருளைப் பெற பல பாகங்களிலும் இருந்தும் பக்த அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தந்ததுடன் தமது நேர்த்தி கடன்களை செலுத்தி பக்தி பூர்வமாக தீமித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்