
ஏறாவூர் பற்றுக் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர்ப்பற்றுக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு கல்வி வலய ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி உமாபதி விவேகானந்தன், ஏறாவூர்ப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.இராஜமோகன், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான கு.சிவராசா, ஆ.பிரகாஷ், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தரம் 3, 4, 5 ஐச் சேர்ந்த 22 அணிகள் போட்டிகளில் கலந்து கொண்டன. இதில் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் மட்/மட்/புனித ஜோசப் கல்லூரி முதலிடத்தையும், மட்/மட்/ஐயங்கேணி தமிழ் மகாவித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், மட்/மட்/குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.






