ஏறாவூரில் நடைபெற்ற அறிவுக் களஞ்சியப் போட்டி!
-மட்டக்களப்பு நிருபர்-
ஏறாவூர் நகரசபை மற்றும் பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் மாணவர்களுக்கிடையிலான அறிவுக் களஞ்சியம் வினா விடைப் போட்டியில் முதலாவது போட்டி ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் செயலாளர் எம்.எச்.எம் ஹமீம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இப்போட்டியில் ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட 08 பாடசாலைகள் பங்குபற்றியதோடு, முதற் சுற்றில் அறபா வித்தியாலயம், அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயம், அலிகார் தேசிய பாடசாலை, கலைமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் வெற்றி பெற்று, அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
2023- ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாதாந்தம் இப்போட்டி நடாத்தப்படவுள்ளதுடன், பங்குபற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பாடசாலை ‘Genius of the month’ விருது வழங்கி கௌரவிக்கப்படுவதுடன், ஒரு மாதத்திற்கு தேசிய செய்திப் பத்திரிகையொன்றினை இலவசமாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் பெறவுள்ளதாக சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ ஹாறூன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எப் றிப்கா கலந்து கொண்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்