ஏறாவூரில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்ற நண்பியின் தந்தை கைது

மட்டக்களப்பு ஏறாவூரில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்த முயன்ற நபரொருவர் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

அம்பாறை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி தாய், தந்தை கைவிடப்பட்ட நிலையில் சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமி சம்பவ தினத்தன்று பாடசாலை விட்டு மீண்டும் இல்லத்துக்கு திரும்பாததையடுத்து நன்னடத்தை உத்தியோகத்தர்கள் அவரை தேடி பாடசாலைக்கு சென்ற நிலையில் சிறுமி அவரது நண்பியின் வீட்டுக்குச் சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

மேலும் குறித்த நண்பியின் தந்தை வீட்டில் தனித்து இருந்துள்ளதுடன் சிறுமியை தாகாத முறைக்கு உட்படுத்த முயன்றதாகவும், இதனையடுத்து சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டதுடன், சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்