ஏரோஃப்ளோட் இலங்கைக்கான விமானங்களை அதிகரிக்கின்றது

ரஷ்யாவின் நேஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் நாளை ஞாயிற்றுக்கிழமை  முதல் வாரத்திற்கு இரண்டு விமானங்களை இலங்கைக்கு இயக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வாடகை விமான நிறுவனமான அஸூர் ஏர் நிறுவனத்திற்கும் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வாரத்திற்கு நான்கு வாடகை விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த அபிவிருத்தியானது ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் என்றும், இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் மூலம் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏரோஃப்ளோட் இலங்கைக்கான விமானங்களை அதிகரிக்கின்றது
ஏரோஃப்ளோட் இலங்கைக்கான விமானங்களை அதிகரிக்கின்றது