ஏமன் அருகே பயணித்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

 

ஏமன் அருகே அரபிக்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் கப்பலில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தாக்குதலில் கப்பலில் பயணித்த மாலுமிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான கப்பல் எந்த நாட்டை சேர்ந்தது என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.