
ஏஐ மூலம் பொலிசாரை ஏமாற்ற நினைத்த இளம்பெண்
அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் ப்ளோரிடாவில் தனது வீட்டு கதவை உடைத்துக் கொண்டு ஒருவர் உள்ளே வந்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஷினால்ட் (வயது 32) என்ற இளம்பெண் புகாரளித்துள்ளார்.
குறித் பெண்ணிடமிருந்து குற்றத்திற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காத நிலையில், அவர் காட்டிய புகைப்படம் ஏஐ ஆல் உருவாக்கப்பட்டது என்பதை பொலிசார் தீவிர விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
மேலும், மன உளைச்சலால் கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்ததாக ஷினால்ட் போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். அதனைதொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அந்த இளம்பெண்ணிடம் கண்டிப்புடன் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
