எஷான் மாலிங்கவின் உபாதை தொடர்பில் விளக்கம்

வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்கவின் உபாதை நிலைமை குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி இருபதுக்கு 20 போட்டியில் அவர் விளையாட மாட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியின் போது எஷான் மாலிங்கவின் தோள்பட்டையில் உபாதை ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் இன்று திங்கட்கிழமை கொழும்புக்கு வரவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து அவரது உபாதையின் தன்மையை கண்டறிய ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.