எல்ல வெல்லவாய வீதி 15ஆம் கட்ட பகுதியில் பஸ் விபத்து இருவர் உயிரிழப்பு
எல்ல – வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில், பேருந்து இன்று வியாழன் இரவு 9 மணியளவில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தங்காலை நகர சபை ஊழியர்கள் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாவை முடித்துக் கொண்டு தங்காலை திரும்பும் வழியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் தொடர்பான சரியான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.