எல்ல பஸ் விபத்து – ஜீப் சாரதி கைது

எல்ல – வெல்லவாய பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்தில் 15 பேர் உயிழந்துள்ளனர் .

நேற்று (04) இரவு 9.00 மணியளில் வெல்லவாய நோக்கிச் சென்ற பஸ் எல்ல பொலிஸ் பிரிவில் 23ஆவது மற்றும் 24ஆவது கிலோமீட்டர் தூணுக்கிடையில் எதிரே வந்த ஜீப் மற்றும் வீதியின் இரும்பு வேலியில் மோதி பஸ் 1000 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஆறு ஆண்கள், ஐந்து பெண்கள், மூன்று சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பயணிகளை மீட்க உதவிய இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தியத்தலாவ, பதுளை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் .