எல்லை தாண்டி மீன்படியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்-

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ்நாட்டிலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவர்கள் இலங்கை கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.