எல்லயில் குப்பை அகற்றும் பணிகள் மந்தநிலை
எல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட சில பகுதிகளில் குப்பை அகற்றும் நடவடிக்கைகள் ஒழுங்கற்ற முறையில் காணப்படுவதால் குறித்த பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய வாகன தரிப்பிட வசதி இல்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.