எலும்புக்கூடுகள் நிறைந்த மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்!
மனித எலும்புக்கூடுகள் நிறைந்த மண்ணில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாரிய மனித புதைகுழிகள் குறித்த நிகழ்வில் உரையாற்றுகையில் மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்ணாண்டோ இதனை தெரிவித்தார்.
நாங்கள் உயிரிழந்வர்களை கௌரவித்து அவர்களை மரியாதையாக வழிஅனுப்பி வைக்கும் இனத்தை சேர்ந்தவர்கள் ஆனால் இலங்கையின் பல பகுதிகளில் காணப்படும் பாரிய மனிதபுதைகுழிகளில் உள்ள ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகளின் மத்தியில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். உலகிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஐநா தெரிவிக்கின்றது என பிரிட்டோ பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் அபிவிருத்திக்கான நிலையம் காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்கள் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பு ஆகியன இணைந்து பாரிய மனித புதைகுழிகளும் தோற்றுப்போன அகழ்வுகளும் என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
இலங்கையின் தென்பகுதியில் கிளர்ச்சி இடம்பெற்றும் வடபகுதியில் மோதல்கள் இடம்பெற்றும் 30 வருடங்களாகின்ற நிலையில் நாட்டின் பல பகுதிகளில் 20 மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்தகாலங்களில் இலங்கை தனது தேயிலைக்காக பெயர் பெற்றது தற்போது அதிகளவானவர்கள் காணாமல்போன இரண்டாவது நாடு என்ற பெயரை பெற்றுள்ளது என பிரிட்டோ பெர்ணாண்டோ கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்