எலுமிச்சை ஜூஸ் பயன்கள்

எலுமிச்சை ஜூஸ் பயன்கள்

எலுமிச்சை ஜூஸ் பயன்கள்

🟢🟡எலுமிச்சை நம் உடலுக்கு பலவகையான நன்மை அளிக்கக்கூடிய ஒரு மருத்துவ பொருளாகும். தற்போது எலுமிச்சை சாறு அழகு கலைகளுக்கு அதிகளவு பயன்பட்டு வருகிறது. இதில் உயர்ரக ஊட்டச்சத்துகளான கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கின்றன. மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்தின் பயன்களும் இருக்கிறது. அந்தவகையில் எலுமிச்சை சாறு மூலம் உடலுக்கு எவ்வாறான பயன்களைத் தரும் என்பதை இப் பதிவில் அறிந்துகொள்வோம்.

🍋எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

🍋எலுமிச்சை சாறு குடிப்பது உங்கள் நீர் உட்கொள்ளல் அளவை அதிகரிக்க உதவும். எடை இழப்புக்கு உதவும் முக்கிய உத்தியாக அதிக நீர் உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது. தவிர இதில் அடங்கி இருக்கும் வைட்டமின் சி, எடை இழப்புக்கு வழிவகுக்கும் கொழுப்புகளின் ஆக்சிஜனேற்றத்திற்கும் உதவுகிறது. எடை குறைக்க விரும்புவோர் காலை வேளையில் எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. ஏனென்றால் காலை நேரத்தில் வளர்சிதை மாற்றம் உச்சத்தில் இருப்பதால் உடல் எடையை குறைக்க எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.

🍋இது இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உங்களது உடலை சோர்வடைவதில் இருந்து மீட்டு ஓய்வளிக்கும். எலுமிச்சை சாறு நமது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

🍋நம் உடலில் செரிமானம் மட்டும் ஒழுங்காக இல்லையென்றால், அது பலவிதமான உபாதைகளில் கொண்டு போய் விட்டு விடும். எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.

🍋குறிப்பாக எலுமிச்சை சாறு கல்லீரலில் உள்ள நச்சு கிருமிகளை அழிக்கிறது. இதனால் கல்லீரல் சுத்தம் அடைவது மட்டும் இல்லாமல் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விரைவில் தீர்வு காண இயலும்.

🍋குறிப்பாக எலுமிச்சை நீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டை வலி மற்றும் தொண்டை கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.

🍋தினமும் எலுமிச்சை சாறு நீரில் கலந்து பருகிவர மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

🍋மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இந்த எலுமிச்சை சாறு பானத்தை தினமும் பருகி வந்தால், செரிமானம் மேம்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

🍋நம் உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் எலுமிச்சை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.

🍋எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. இது ஆன்டி-ஏஜிங் பண்புகளை கொண்டுள்ளது. எலுமிச்சை சாறு உங்கள் சருமத்தில் உள்ள கொலாஜனின் அளவை அதிகரிப்பது, பளபளப்பான மற்றும் குறைபாடற்ற சருமத்திற்கு உதவுவது உட்பட எண்ணற்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளன.

எலுமிச்சை ஜூஸ் பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்