எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

விசேடமாகப் புத்தாண்டு காலப்பகுதியில் வயல்வெளிகளுக்கு அருகில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, தசை உளைவு, மூட்டுகளில் வலி, சரும எரிச்சல் போன்றவற்றுடன் வாந்திபேதி, தசை வீக்கம் என்பனவும் எலிக்காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க