எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

நாட்டிற்கு 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்ய உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசாங்கத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

இதனூடாக, எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனவும், இடைக்கால பாதீட்டில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும், பிரதமர் மேலும் தெரிவித்தார்.