
எரிவாயுவின் விலையில் மாற்றம்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.76 அமெரிக்க டொலராகவும் பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.77 அமெரிக்க டொலராகவும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.67 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
