
எரிவாயுவின் விலையில் திருத்தம்?
லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே லிட்ரோ எரிவாயுவை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை லாஃப் சமையல் எரிவாயுவின் விலையில் இம்மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
