எரிமலை வெடிப்பு: 11 பேர் மரணம், 12 பேர் மாயம்

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் மராபி எரிமலை வெடித்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதிகள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மீண்டும் எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளதால் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.