எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ள தகவல்

எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படும் என அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

எனினும், இந்த மாதம் 15 ஆம் திகதிக்குரிய விலை திருத்தம் தொடர்பில் தெரிவிக்கையில், ‘தற்போதைய எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை’ என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த விலை திருத்தம் அடுத்த மாதம் 1ம் திகதி பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.