சிபெட்கோ நிறுவனம் எரிபொருள் விலையை மாற்றியமைத்துள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 366 ரூபாவாகும்.
இதேவேளை, 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு,, புதிய விலை 464 ரூபாவாகும்.
லங்கா ஓட்டோ டீசல் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 358 ரூபாவாக பதிவு செய்யப்படவுள்ளது.
லங்கா சுப்பர் டீசல் விலையும் 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 475 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 236 ரூபாவாக பதிவாகியுள்ளது.