எரிபொருள் விலையில் மாற்றம்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலையைக் குறைக்கவுள்ளது.

இதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 95 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 6 ரூபாவினால் குறைத்து 371 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 313 ரூபாவா பதிவாகியுள்ளது.

ஒக்டேன் 92 வகை பெற்றோலின் விலை 311 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 283 ரூபாய் என்ற விலையில் மாற்றமின்றி தொடரப்படவுள்ளது.

மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 183 ரூபாய் என்ற விலையில் மாற்றமின்றி தொடர  இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்