எரிபொருள் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அதிகளவிலான கையிருப்புக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளாந்தம் 4000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 3000 மெட்ரிக் டன் பெற்றோல் என்பன இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும்.

அதேநேரம், மேலும் 35,000 மெட்ரிக் டன் 92 ஒக்டென் பெற்றோலைக் கொண்ட கப்பல் ஒன்றிலிருந்து தரையிறக்கும் பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆரம்பிக்கப்பட்டன என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.