
எரிபொருள் விநியோகம் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள தகவல்
இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு, 4,000 மெற்றிக் தொன் டீசலும், 3,000 மெட்ரிக் தொன் பெற்றோலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 30 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பும், 22 நாட்களுக்கு போதுமான பெற்றோல் இருப்பும் உள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
