எரிபொருள் விநியோகத்தை நிறுத்த வேண்டி வரும் : அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

எரிபொருள் பௌசர்கள் நிரப்பு நிலையங்களுக்கு செல்லும் போது, ஒரு சில ஒழுங்கமைக்கப்பட்ட சிறு குழுக்கள் பௌசரை தடுத்து நிறுத்தி குழ்ப்பம் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழுக்கள், இவ்வாறு கொண்டு செல்லும் எரிபொருளை, பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இறக்கிச் செல்லுமாறு கோரி மிரட்டுவதுடன், தீ வைக்கப்படும் என அச்சுறுத்தி வருவதாக, முறைப்பாடு கிடைத்துள்ளது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலை தொடர்ந்தால், போக்குவரத்து ஊழியர்களின் பாதுகாப்பிற்காக எரிபொருள் விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும், என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.