
எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
பணம் செலுத்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்ததன் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் QR முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நாளாந்தம் வழங்கப்படும் பெற்றோல் மற்றும் டீசலின் அளவை குறைக்கவில்லை என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வங்கி கணக்கில் பணத்தை வைப்பு செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளதால் விநியோக நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
