எரிபொருள் வரிசையில் மோதல் : இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி மாகல்லவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் ஏற்பட்ட மோதலில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.